Tuesday, April 23, 2019
Home > Slider > ஊடக விபச்சாரம்!  பூனைக்கு மணி கட்டுவது யார்?

ஊடக விபச்சாரம்!  பூனைக்கு மணி கட்டுவது யார்?

தமிழ் சமூகத்தில் இடம் பெறும் தில்லுமுல்லுகளை பொது வெளிகளில் காத்திரமாக வெளிக்கொணரும் ஊடகங்களை குறிவைத்து ஒரு சில தமிழ் அமைப்புக்கள் மற்றும் நிறுவனங்கள் சட்ட நடவடிக்கை என்ற பெயரில் ஒரு மறைமுக எச்சரிக்கையை வெளிப்படுத்துகின்றன. இதற்க்கு ஆதரவாக சில ஊடகங்கள் ஒத்துஊதுவதையும் காணக்கூடியவாறுள்ளது.

கடந்த சில மாதங்களாக இந்தப்போக்கை அவதானிக்கவாறுள்ளது.  நாம் என்னவும் செய்வோம் எங்களை யாரும் கேள்வி கேட்க முடியாது என்கின்ற ரீதியில் தமிழ் சமூகத்தின் பங்களிப்பில் உருவான அமைப்புகள் சில வரிந்துகட்டிக்கொண்டு நிற்கின்றன.  வேலிக்கு ஓணான் சாட்சி போல ஒரு சில ஊடகங்களும் துணை நிற்கின்றன.

இதே வேளை இப்பிரச்சனைகளை பொது வெளியில் கொண்டு வந்த ஊடகங்களுக்கு தமிழ் சமூகம் கொடுக்கும் ஆதரவைப்பார்க்கும்போது அவ்வமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் மீது எவ்வளவு விசனத்தில் உள்ளார்கள் என்பதை உணரக்கூடியவாறுள்ளது.

ஆனால் சில ஊடகங்களோ பணத்துக்கும் எலும்புத்துண்டுக்கும் ஆசைப்பட்டு அவர்களுக்கு வக்காலத்து வாங்குவதையும், அச்செய்தி குறித்தோ அல்லது விமர்சனம் குறித்த உண்மைகளை மறைத்து அல்லது திரிபுபட எழுதி நியாயப்படுத்துபவர்களை ஊடகவியலாளர் என்றோ அல்லது ஊடகம் என்றோ ஏற்றுக்கொள்ளமுடியாது.  அவர்கள் ஊடக விபச்சாரம் செய்கிறார்களே அன்றி ஊடகதர்மத்தின்படி நிற்கவில்லை.  ஓர் ஊடகம் செயல்படுவதற்கு வருவாய் முக்கியம் என்பதை மறுப்பதற்கில்லை, ஆனால் வருவாய்க்காக எதையும் செய்யலாம் என்றால் அதை நாம் ஊடகவிபச்சாரமெனத்தான் பார்க்க வேண்டியுள்ளது.

உங்களுக்கு வேண்டியவர்கள் பற்றிய செய்திகள், விமர்சனங்களை பிரசுரிப்பது அல்லது தவிர்ப்பது உங்கள் உரிமை.  ஆனால் அச்செய்தியை திரிபுபடுத்துவதை ஏற்றுக்கொள்ளமுடியாது.

பூனைக்கு மணிக்கட்டுவது யார் என்ற கேள்வி இருந்தது, அனால் இப்பொழுது பூனைகளுக்கு மணி கட்டியாகிவிட்டது.  இனி மணிச்சத்தம் கேட்டால் மக்களிடமிருந்தும் நேர்மையான ஊடகங்களிடமிருந்தும் இடிச்சத்தங்கள் கேடகத்தொடங்கிவிட்ட்து.

அதிகாரங்களும் அடக்குமுறைகளுக்கும் பணத்துக்கும் பணியாத ஊடகங்கள் இன்னும் இருந்துகொண்டுதான் இருக்கின்றது. அதனால்தான் நியாயங்கள் உலகின் கவனத்திற்ட்கு வருகின்றன.

கணக்கு போட்ட நேரம் முடிந்து, கணக்கு காட்டிடவேண்டிய வேளை வந்துவிட்ட்து.  உங்களின் மேல் கை நீளமுன் உங்கள் கணக்குகளை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

இனி தோண்டத் தோண்ட பூதங்கள் கிளம்பிக்கொண்டிருக்கும்.

– சினேகமுடன் கஜேந்திரன்

தற்போதய செய்திகள்

மின்னஞ்சல் செய்திகள்

எமது புதிய செய்திகள், பதிவுகள் பற்றிய தகவலை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ள இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியை TYPE செய்யுங்கள்.

சினிமா

ஒருதலைக் காதல் பற்றி இவங்க என்ன சொல்றாங்க என்று கொஞ்சம் பாருங்கள்!- (வீடியோ இணைப்பு)

விஜய்யுடன் இணையும் சிம்பு – ரசிகர்கள் டபுள் கொண்டாட்டம்!

ரஞ்சித் இது என் கடைசிப் படம் காப்பாத்துங்க- ரஜினி : மக்களின் அன்பை இழந்த பரிதாபம்

ராதிகா அப்தேவின் அந்த படம்..! உள்ளேபோய் பார்க்காதீங்க..!

என்னை அவிழ்த்துப்போட்டு நடிக்க சொன்னார்! பிரபல நடிகையின் கார சார வாக்குமூலம்

மருத்துவம்

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமடையும் பெண்கள்

வழுக்கைத் தலையில் முடி வளர வேண்டுமா? அப்ப இத தினமும் தலையில தடவுங்க…

இதை ஒரு ஸ்பூன் கலந்து குடித்தால், தொப்பைக்கு சொல்லலாம் குட்பை!

வைரலாகும் வதந்திகளை தடுக்க பேஸ்புக் தரும் அதிரடி வசதி…!

இந்த அறிகுறிகள் தென்பட்டால் தயவு செய்து தாமதிக்காதீர்கள்!