Friday, April 26, 2019
Home > Slider > ஹெலிகொப்டர் ஊழல் வழக்கில் இடைத்தரகரை இந்தியாவுக்கு நாடு கடத்தியது துபாய் அரசு!

ஹெலிகொப்டர் ஊழல் வழக்கில் இடைத்தரகரை இந்தியாவுக்கு நாடு கடத்தியது துபாய் அரசு!

ஹெலிகொப்டர் ஊழல் வழக்கில் புதிய திருப்பமாக துபாயில் வசிக்கும் இடைத்தரகரை இந்தியாவுக்கு நாடு கடத்த துபாய் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது முக்கிய தலைவர்கள் பயணிப்பதற்காக இந்திய விமானப்படைக்கு 3,600 கோடி ரூபாய் மதிப்பில் 12 ஹெலிகொப்டர்கள் கொள்வனவு செய்ய அகஸ்டா வெஸ்ட்லேண்ட் என்ற இத்தாலி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தில் 423 கோடிரூபாய்க்கு ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து கடந்த 2014ஆம் ஆண்டு ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டது.

மேலும், 3,600 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாக கூறப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய ஹெலிகாப்டர் பேரத்திற்கு இடைத்தரகராக செயல்பட்ட இங்கிலாந்தை சேர்ந்த கிறிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கேல் (வயது 54) கடந்த 5 ஆண்டுகளாக துபாயில் வசித்து வருகின்றார்.

குறித்த நபரை விசாரணைக்காக அனுப்பி வைக்குமாறு இந்திய அரசின் சார்பில் துபாய் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு, இது தொடர்பாக துபாய் துறைமுக பகுதியிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டது.

மேலும், இதன் அடிப்படையில் துபாய் மேல்நிலை நீதிமன்றத்தில் விசாரணைகள் நடைபெற்றுவந்தது. விசாரணை நிறைவடைந்ததை தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதமே அவரை நாடு கடத்தி இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதுகுறித்த முறையான அறிவிப்பு தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும் ஜேம்ஸ் மைக்கேல் தரப்பு சட்டத்தரணி தெரிவித்தார்.

குறித்த விசாரனையை மறுபடியும் விசாரித்த துபாய் நீதிமன்றம், ஜேம்ஸ் மைக்கேலை நாடுகடத்தும் உத்தரவுக்கான அறிக்கையை அளித்தது.

சர்வதேச விவகாரம் என்பதால் துபாய் அரசும், ஜேம்ஸ் மைக்கேலை இந்தியாவுக்கு நாடு கடத்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தது. இதனை அடுத்து இந்திய தூதரகம் மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஒத்துழைப்பில் அவர் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

நேற்று இரவு 10.35 மணிக்கு மைக்கேல் விமானம் மூலம் டெல்லிக்கு வருகைதந்திருந்த நிலையில், அவரை சி.பி.ஐ. முறைப்படி கைது செய்து வசாரைணகளை நடத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

தற்போதய செய்திகள்

மின்னஞ்சல் செய்திகள்

எமது புதிய செய்திகள், பதிவுகள் பற்றிய தகவலை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ள இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியை TYPE செய்யுங்கள்.

சினிமா

ஒருதலைக் காதல் பற்றி இவங்க என்ன சொல்றாங்க என்று கொஞ்சம் பாருங்கள்!- (வீடியோ இணைப்பு)

விஜய்யுடன் இணையும் சிம்பு – ரசிகர்கள் டபுள் கொண்டாட்டம்!

ரஞ்சித் இது என் கடைசிப் படம் காப்பாத்துங்க- ரஜினி : மக்களின் அன்பை இழந்த பரிதாபம்

ராதிகா அப்தேவின் அந்த படம்..! உள்ளேபோய் பார்க்காதீங்க..!

என்னை அவிழ்த்துப்போட்டு நடிக்க சொன்னார்! பிரபல நடிகையின் கார சார வாக்குமூலம்

மருத்துவம்

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமடையும் பெண்கள்

வழுக்கைத் தலையில் முடி வளர வேண்டுமா? அப்ப இத தினமும் தலையில தடவுங்க…

இதை ஒரு ஸ்பூன் கலந்து குடித்தால், தொப்பைக்கு சொல்லலாம் குட்பை!

வைரலாகும் வதந்திகளை தடுக்க பேஸ்புக் தரும் அதிரடி வசதி…!

இந்த அறிகுறிகள் தென்பட்டால் தயவு செய்து தாமதிக்காதீர்கள்!