Friday, April 26, 2019
Home > Slider > ராஜஸ்தான், தெலங்கானா சட்டப்பேரவை இன்று நிறைவு!

ராஜஸ்தான், தெலங்கானா சட்டப்பேரவை இன்று நிறைவு!

ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று (புதன்கிழமை) மாலையுடன் நிறைவடையவுள்ள நிலையில், பல்வேறு தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராஜஸ்தான், தெலங்கானா சட்டப்பேரவைகளுக்கு எதிர்வரும் 7ஆம்  திகதி நடைபெறும் தேர்தலைமுன்னிட்டு  2 மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குச் சாவடிகளில் வழக்கத்தை விட கூடுதல் பொலிஸார் கடமைகளில் ஈடுபத்தப்பட்டுள்ளனர். வாக்குகள் எண்ணும் நடவடிக்கைகள் எதிர்வரும் 11ஆம் திகதி நடைபெறவுள்ளன.

இந்நிலையில், ராஜஸ்தானில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரும் இறுதி கட்ட பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் தெலங்கானாவில் டி.ஆர்.எஸ் மற்றும் டி.டி.பி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கமைய நேற்று ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன் கார் பகுதியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றிய போது, காங்கிரஸ் கட்சியினர் ஆட்சி பேராசையில் செயற்படுவதாக குற்றம் சுமத்தினார்.

மேலும், தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் துல்லிய தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

இதேவேளை, ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் மலக்கேரா நகரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் உரையாற்றினார்.

“மோடி அரசாங்கம் விவசாயிகளை மறந்தது ஏன்”, என கேள்வி எழுப்பிய ராகுல் தொழிலதிபர்கள் திருப்பிச் செலுத்தாத 3 தசம் 5 லட்சம் கோடி ரூபாய் கடனை மத்திய அரசு ரத்து செய்துள்ளதாக குற்றம் சுமத்தினார்.

தெலங்கானாவில் ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி என்ற டி.ஆர்.எஸ் கட்சித் தலைவரும் முதல்வருமான கே.சந்திர சேகரராவ், பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகள் இன்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

தற்போதய செய்திகள்

மின்னஞ்சல் செய்திகள்

எமது புதிய செய்திகள், பதிவுகள் பற்றிய தகவலை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ள இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியை TYPE செய்யுங்கள்.

சினிமா

ஒருதலைக் காதல் பற்றி இவங்க என்ன சொல்றாங்க என்று கொஞ்சம் பாருங்கள்!- (வீடியோ இணைப்பு)

விஜய்யுடன் இணையும் சிம்பு – ரசிகர்கள் டபுள் கொண்டாட்டம்!

ரஞ்சித் இது என் கடைசிப் படம் காப்பாத்துங்க- ரஜினி : மக்களின் அன்பை இழந்த பரிதாபம்

ராதிகா அப்தேவின் அந்த படம்..! உள்ளேபோய் பார்க்காதீங்க..!

என்னை அவிழ்த்துப்போட்டு நடிக்க சொன்னார்! பிரபல நடிகையின் கார சார வாக்குமூலம்

மருத்துவம்

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமடையும் பெண்கள்

வழுக்கைத் தலையில் முடி வளர வேண்டுமா? அப்ப இத தினமும் தலையில தடவுங்க…

இதை ஒரு ஸ்பூன் கலந்து குடித்தால், தொப்பைக்கு சொல்லலாம் குட்பை!

வைரலாகும் வதந்திகளை தடுக்க பேஸ்புக் தரும் அதிரடி வசதி…!

இந்த அறிகுறிகள் தென்பட்டால் தயவு செய்து தாமதிக்காதீர்கள்!