Thursday, June 20, 2019
Home > செய்தி > தமிழ்நாடு > மெரினாவில் விதைக்கப்பட்ட விதைகள் மரமாக அல்ல மலையாக வளர்ந்து வருகிறது! சகாயம் ஐ.ஏ.எஸ்.,பெருமிதம்!

மெரினாவில் விதைக்கப்பட்ட விதைகள் மரமாக அல்ல மலையாக வளர்ந்து வருகிறது! சகாயம் ஐ.ஏ.எஸ்.,பெருமிதம்!

நான் தமிழகத்தில் எந்த மாதிரியான மாற்றத்தை எதிர்பார்த்தேனோ அந்த மாற்றம் தற்போது நடந்து வருகிறது.

பெண்கள், பள்ளி மாணவ, மாணவியர் உட்பட ஒட்டு மொத்த பொதுமக்களும் டாஸ்மாக்கிற்கு எதிராக அணி திரண்டுள்ளதால் அதிகார வர்க்கம் மிரண்டு போயுள்ளது.

மெரினாவில் விதைக்கப்பட்ட விதை மரமாக மட்டும் அல்லாமல் மலையாக வளர்ந்து கொண்டிருக்கிறது.

டாஸ்மாக் மூடப்பட்டால் ஆண்டிற்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்பதால் தயங்குகிறது. டாஸ்மாக் வருமானம் ஒரு பாதியாக குறைந்து இருக்கிறது. அது மேலும் குறையும், காரணம் குடிக்கு எதிராக மக்களின் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.

இலவசம் என்ற பெயரில் மீனுக்குப் புழுவை போல வாரி, வாரிக் கொடுத்து செயற்கையாகக் கடன் சுமையைத் தமிழக அரசு ஏற்றிவருகிறது.

இது குறித்து நான் ஏற்கனவே தமிழக அரசுக்கு சில ஆண்டுகளுக்கு முன்னரே கூறியிருந்தேன்.

அவை.

1. தமிழ்நாட்டில் உள்ள ஏரிகள், கண்மாய்கள், அணைகள் ஆகியவற்றைத் தூர்வாரி மணலை விற்பனை செய்தால், ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும்.

2. தென்மாவட்டங்களில் தாதுமணல் விற்பனை செய்வதை அரசு மயமாக்கினால், ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும்.

3. மின்சாரத்தைத் தனியார் நிறுவனங்களிடம் இருந்து அதிக கொள்முதல் விலை கொடுத்து வாங்காமல் இருந்தால், ஆண்டுக்கு ரூ.2 ஆயிரத்து 750 கோடி மிச்சமாகும்.

4. உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக புதுவீட்டுமனைகள்/ மனைப்பிரிவுக்கு திட்ட மற்றும் கட்டுமான ஒப்புதல் அளிக்கக் கட்டணம் வசூலித்தால், ஆண்டுக்கு ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும்.

5. புதிய வீடுகளுக்குச் சொத்துவரி/ விரிவாக்கப் பகுதிகளுக்கும் சொத்துவரி/ திருத்திய சொத்துவரி என வசூலித்தால், ஆண்டுக்கு ரூ.1.50 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும்.

6. கோவில் நிலங்கள், கடைகளை முறைப்படுத்தி குத்தகை-வாடகை வசூலிப்பதன் மூலம் ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும்.

7. அரசு புறம்போக்கு, காலி நிலங்களை வணிகப்படுத்தினால், ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும்.

8. வீதிகள், சாலைகளில் நிறுத்தப்படும் 1 கோடியே 30 லட்சம் வாகனங்களுக்கு வாடகை கட்டணம் வசூலித்தால் ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும்.

9. சுற்றுலாத் தலங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி சுற்றுலா வரி வசூலித்தால், ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும்.

10. பன்னாட்டு நிறுவனங்களுக்கு நிலம், தண்ணீர், மின்சாரம் வழங்குவதில் சலுகைகளை நிறுத்தினால், ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி வருவாய் மிச்சமாகும்.

11. உள்ளாட்சி அமைப்புகளில் வசூலிக்கப்படாத நிலுவை வரியை நிதி இழப்பு தணிக்கை மூலம் செயல்படுத்தினால், ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும்.

12. வளர்ச்சி திட்டங்களுக்கு உலக வங்கி, ஆசிய வங்கிகளிடமிருந்து கடன் பெறாமல், தேசியமயமாக்கப்பட்ட இந்திய வங்கிகளிடமிருந்து கடன் பெற்றால் ஆண்டுக்கு ரூ.17 ஆயிரம் கோடி வட்டி தொகை குறையும்.

13. மேற்கண்ட திட்டங்களை நிறைவேற்றுவதற்கு 2 லட்சம் பணியாளர்கள் தேவைப்படுவார்கள். எனவே டாஸ்மாக கடைகளை மூடுவதால் வேலை இழக்கும் 30 ஆயிரம் பேருக்கு இத்திட்ட பணிகளில் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

14. 2 லட்சம் பேருக்கு மாதம் ரூ.10 ஆயிரம், ரூ.15 ஆயிரம், ரூ.20 ஆயிரம் என ஊதியம் வழங்கினால் கூட ஆண்டுக்கு ரூ.3 ஆயிரத்து 600 கோடி மட்டுமே செலவாகும். இது மொத்த கூடுதல் வருவாயான ரூ.5 லட்சம் கோடியில் 1 சதவீதத்துக்குக் குறைவானது தான்.

இதைச் செயல்படுத்தினால் தமிழ்நாடு கடன் இல்லாத நாடாகமாறும். தொழில் வளர்ச்சியில் மிகப்பெரிய வளர்ச்சி அடையும்.

அது அன்பு மணியோ, சீமானோ இல்லை ரஜினியோ. யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும்.

இனி அரசியல் வாதிகளுக்கு வேறு வழியில்லை. மக்கள் விழிப்படைய ஆரம்பித்து விட்டார்கள். இதற்கு முன்பு போல் இப்பொழுது மக்களை ஏமாற்ற முடியாது., என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

தற்போதய செய்திகள்

மின்னஞ்சல் செய்திகள்

எமது புதிய செய்திகள், பதிவுகள் பற்றிய தகவலை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ள இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியை TYPE செய்யுங்கள்.

சினிமா

ஒருதலைக் காதல் பற்றி இவங்க என்ன சொல்றாங்க என்று கொஞ்சம் பாருங்கள்!- (வீடியோ இணைப்பு)

விஜய்யுடன் இணையும் சிம்பு – ரசிகர்கள் டபுள் கொண்டாட்டம்!

ரஞ்சித் இது என் கடைசிப் படம் காப்பாத்துங்க- ரஜினி : மக்களின் அன்பை இழந்த பரிதாபம்

ராதிகா அப்தேவின் அந்த படம்..! உள்ளேபோய் பார்க்காதீங்க..!

என்னை அவிழ்த்துப்போட்டு நடிக்க சொன்னார்! பிரபல நடிகையின் கார சார வாக்குமூலம்

மருத்துவம்

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமடையும் பெண்கள்

வழுக்கைத் தலையில் முடி வளர வேண்டுமா? அப்ப இத தினமும் தலையில தடவுங்க…

இதை ஒரு ஸ்பூன் கலந்து குடித்தால், தொப்பைக்கு சொல்லலாம் குட்பை!

வைரலாகும் வதந்திகளை தடுக்க பேஸ்புக் தரும் அதிரடி வசதி…!

இந்த அறிகுறிகள் தென்பட்டால் தயவு செய்து தாமதிக்காதீர்கள்!