Friday, April 26, 2019
Home > Slider > பழைய பன்னீர்செல்வமாக திரும்பிய டோணி.. பயிற்சி ஆட்டத்தில் விளாசல்.. இந்திய ஏ அணி ரன் குவிப்பு

பழைய பன்னீர்செல்வமாக திரும்பிய டோணி.. பயிற்சி ஆட்டத்தில் விளாசல்.. இந்திய ஏ அணி ரன் குவிப்பு

மும்பை: இங்கிலாந்துக்கு எதிரான முதல் பயிற்சி ஆட்டத்தில் டோணி தலைமையிலான இந்திய ஏ அணி 304 ரன்களை குவித்துள்ளது. டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கில் தோற்று திரும்பிய இங்கிலாந்து, தற்போது ஒருநாள் தொடருக்காக இந்தியா வந்துள்ளது. முன்னதாக இன்று இந்திய ஏ அணியுடன் மும்பையில் பயிற்சியாட்டத்தில் அந்த அணி களம் கண்டது.

டாசில் வென்ற இங்கிலாந்து கேப்டன் மோர்கன் பீல்டிங்கை தேர்ந்தெடுத்தார். இதையடுத்து இந்தியா பேட் செய்தது. தவான், மந்தீப் சிங் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். நிதானமாக ஆடியது இந்த ஜோடி. 24 பந்துகளில் 8 ரன்கள் எடுத்திருந்த மந்தீப் சிங் வில்லே பந்து வீச்சில் அவுட்டானார். தவான் 84 பந்துகளில், 63 ரன்களில் அவுட்டானார். அம்பத்தி ராயுடு பொறுப்போடு ஆடி, 100 ரன்கள் விளாசி, ஓய்வு எடுத்துக்கொண்டார்.

எதிர்பார்க்கப்பட்ட மறு வரவான யுவராஜ் சிங், 48 பந்துகளில் 56 ரன்கள் விளாசி அவுட்டானார். இதில் 2 சிக்சர்களும் அடங்கும். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் இறுதியில், இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 304 ரன்கள் எடுத்தது. கேப்டன் என்ற வகையில் கடைசி போட்டியில் களம் கண்ட டோணி, தனது பழைய அதிரடி ஆட்டத்தை இன்று வெளிக்காட்டினார். இனி வரும் போட்டிகளில் கேப்டன் பதவியை துறந்துவிட்டு பழையபடி பேட்டிங்கில் ஆவேசம் காட்டுவதற்கான சிக்னல் இது என அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள்.

ஏனெனில் டோணி, 40 பந்துகளில் 68 ரன்கள் விளாசி அவுட்டாகாமல் களத்தில் நின்றார். இதில் 8 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் அடங்கும். ஆல்-ரவுண்டர் பாண்ட்யாவும் 4 ரன்களுடன் களத்தில் நின்றார். முன்னதாக சஞ்சுசாம்சன் டக்அவுட்டாகியிருந்தார். இந்திய அணி விவரம்: டோணி (கேப்டன்-விக்கெட் கீப்பர்), ஷிகர் தவான், யுவராஜ்சிங், மன்தீப் சிங், அம்பட்டி ராயுடு, சஞ்சு சாம்சன், ஹர்த்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ், மோகித் ஷர்மா, சஹல், ஆஷிஷ் நெஹ்ரா. இங்கிலாந்து அணி: ஜேசன் ராய், அலெக்ஸ் ஹேல்ஸ், சாம் பில்லிங்ஸ், இயோன் மோர்கன், ஜோஸ் பட்லர், மொயீன் அலி, லியாம் தவ்சன், கிரிஸ் வோக்ஸ், அடில் ரஷீத், டேவிட் வில்லே, ஜேக் பால்.

Leave a Reply

தற்போதய செய்திகள்

மின்னஞ்சல் செய்திகள்

எமது புதிய செய்திகள், பதிவுகள் பற்றிய தகவலை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ள இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியை TYPE செய்யுங்கள்.

சினிமா

ஒருதலைக் காதல் பற்றி இவங்க என்ன சொல்றாங்க என்று கொஞ்சம் பாருங்கள்!- (வீடியோ இணைப்பு)

விஜய்யுடன் இணையும் சிம்பு – ரசிகர்கள் டபுள் கொண்டாட்டம்!

ரஞ்சித் இது என் கடைசிப் படம் காப்பாத்துங்க- ரஜினி : மக்களின் அன்பை இழந்த பரிதாபம்

ராதிகா அப்தேவின் அந்த படம்..! உள்ளேபோய் பார்க்காதீங்க..!

என்னை அவிழ்த்துப்போட்டு நடிக்க சொன்னார்! பிரபல நடிகையின் கார சார வாக்குமூலம்

மருத்துவம்

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமடையும் பெண்கள்

வழுக்கைத் தலையில் முடி வளர வேண்டுமா? அப்ப இத தினமும் தலையில தடவுங்க…

இதை ஒரு ஸ்பூன் கலந்து குடித்தால், தொப்பைக்கு சொல்லலாம் குட்பை!

வைரலாகும் வதந்திகளை தடுக்க பேஸ்புக் தரும் அதிரடி வசதி…!

இந்த அறிகுறிகள் தென்பட்டால் தயவு செய்து தாமதிக்காதீர்கள்!