Friday, April 26, 2019
Home > Slider > நாளுக்கு நாள் கரையும் ஆதரவு: பரிதாப நிலைக்கு தள்ளப்பட்ட ஜெ. அண்ணன் மகள் தீபா?

நாளுக்கு நாள் கரையும் ஆதரவு: பரிதாப நிலைக்கு தள்ளப்பட்ட ஜெ. அண்ணன் மகள் தீபா?

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் வீட்டில் சில நாட்களாக ஆதரவாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் அவரது தரப்பினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க. பொதுச் செயலாளரான சசிகலாவின் தலைமையை ஏற்காதவர்கள் தீபாவின் பின்னால் அணிவகுத்தனர்.

மட்டுமின்றி தீபாவின் வீடு அமைந்துள்ள தி.நகருக்கு தமிழகம் முழுவதும் இருந்து அ.தி.மு.க.வினர் குவிந்தனர். தொடர்ந்து தீபா பேரவையும் தொடங்கப்பட்டு பேனர்களும் வைக்கப்பட்டன.

தொண்டர்களைச் சந்தித்த தீபா, ஜெயலலிதாவின் பிறந்த தினமான பிப்ரவரி 24-ம் திகதி அரசியல் பயணம் குறித்து அறிவிப்பதாக தெரிவித்தார். இதற்கிடையில் சசிகலா, முதல்வராக தெரிவு செய்யப்பட்டதும் தேர்தலில் போட்டியிடுவதாகவும் அறிவித்தார் தீபா.

இதனால் அவரது ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்தனர். தீபாவின் ஒவ்வொரு செயல்பாடுகளும் ஜெயலலிதாவை நினைவுப்படுத்தும் வகையில் இருப்பதாகவும் தீபாவின் ஆதரவாளர்கள் ஸ்லாகித்தனர்.

இந்நிலையில், அ.தி.மு.க.வில் உள்கட்சி மோதலால் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பொதுச் செயலாளர் சசிகலா ஆகியோர் தலைமையில் இரண்டு அதிகார மையங்கள் உருவாகி இருக்கின்றன.

சசிகலாவின் தலைமையை விரும்பாதவர்கள் தீபாவை ஆதரித்த நிலையில் தற்போது அவர்களில் பெரும்பாலானவர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிக்கத் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஓ.பன்னீர்செல்வத்தின் அதிரடி முடிவுக்குப்பிறகு தீபாவின் வீட்டுக்கு வரும் ஆதரவாளர்கள் கூட்டம் குறையத் தொடங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக உளவுப்பிரிவு பொலிஸாரும் உயர் அதிகாரிகளுக்கு தகவல்கள் அளித்துள்ளனர்.

இது சசிகலா தரப்புக்கு மகிழ்ச்சியை அளித்தாலும் பெரும் தலைவலியாக ஓ.பன்னீர்செல்வம் இருப்பதால் அவர்கள் அமைதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பேசிய ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர், “தீபாவை ஆதரித்த கட்சியின் நிர்வாகிகள் மீது இதுவரை சசிகலா நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்த கட்சியின் முன்னணி நிர்வாகிகள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறார் சசிகலா.

சசிகலாவின் தலைமையை பெரும்பாலான கட்சி தொண்டர்கள், மக்கள் விரும்பவில்லை. வேறுவழியின்றி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் என்றும், அவரைப் போல உருவத் தோற்றம் இருப்பதைப் பார்த்தும் தொண்டர்கள் அங்கு சென்றனர்.

தற்போது கட்சியினருக்கு வழிகாட்ட ஓ.பன்னீர்செல்வம் உள்ளார். இதனால் தீபா வீட்டில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை தொண்டர்கள், கட்சியின் நிர்வாகிகள் ஆதரித்து வருகின்றனர்.

இதுவே எங்களுடைய பலம். ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம். இதனால் அவரை நம்பி அனைவரும் வருகின்றனர். தீபாவையும் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து பணியாற்ற அழைப்பு விடுக்கப்பட்டது.

ஆனால் அதற்கு அவர் ஆலோசித்துவிட்டு முடிவை தெரிவிப்பதாக அறிவித்துள்ளார். எங்களுடைய ஒரே நோக்கம் சசிகலா தரப்பினரிடம் ஆட்சியும், அதிகாரமும் சென்று விடக்கூடாது. அதே சமயத்தில் தீபா எங்களுக்கு எதிரியல்ல”என்றனர்.

ஆனால் குறித்த விவகாரம் தொடர்பாக தீபா கருத்து தெரிவிக்க மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், தற்போது நடந்தேறும் அரசியல் மாற்றங்கள் தீபா தரப்புக்கு கடும் அதிர்ச்சியை அளித்திருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply

தற்போதய செய்திகள்

மின்னஞ்சல் செய்திகள்

எமது புதிய செய்திகள், பதிவுகள் பற்றிய தகவலை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ள இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியை TYPE செய்யுங்கள்.

சினிமா

ஒருதலைக் காதல் பற்றி இவங்க என்ன சொல்றாங்க என்று கொஞ்சம் பாருங்கள்!- (வீடியோ இணைப்பு)

விஜய்யுடன் இணையும் சிம்பு – ரசிகர்கள் டபுள் கொண்டாட்டம்!

ரஞ்சித் இது என் கடைசிப் படம் காப்பாத்துங்க- ரஜினி : மக்களின் அன்பை இழந்த பரிதாபம்

ராதிகா அப்தேவின் அந்த படம்..! உள்ளேபோய் பார்க்காதீங்க..!

என்னை அவிழ்த்துப்போட்டு நடிக்க சொன்னார்! பிரபல நடிகையின் கார சார வாக்குமூலம்

மருத்துவம்

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமடையும் பெண்கள்

வழுக்கைத் தலையில் முடி வளர வேண்டுமா? அப்ப இத தினமும் தலையில தடவுங்க…

இதை ஒரு ஸ்பூன் கலந்து குடித்தால், தொப்பைக்கு சொல்லலாம் குட்பை!

வைரலாகும் வதந்திகளை தடுக்க பேஸ்புக் தரும் அதிரடி வசதி…!

இந்த அறிகுறிகள் தென்பட்டால் தயவு செய்து தாமதிக்காதீர்கள்!