Thursday, June 20, 2019
Home > Slider > துணை ராணுவத்தில் 872 காலியிடங்கள்

துணை ராணுவத்தில் 872 காலியிடங்கள்

நமது நாட்டில் வடக்கு எல்லை மாநிலங்களான அசாம், வடக்கு வங்கம், உத்திரப்பிரதேசம், இமாச்சலபிரதேசம், லடாக் உள்ளிட்ட எல்லைகளைக் காப்பதில் சகஸ்ட்ர சீமா பால் (எஸ்.எஸ்.பி.,) எனப்படும் மத்திய ஆயுத காவல் படை ஈடுபட்டு வருகிறது. இது இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பாதுகாப்புப் படைகளில் ஒன்று. இந்த காவல் படையில் பல்வேறு பிரிவுகளில் உள்ள 872 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பிரிவுகள்: கம்யூனிகேஷன் துறை சார்ந்த துணை ஆய்வாளர் பிரிவில் 16 இடங்களும், இதே துறை சார்ந்த உதவி துணை ஆய்வாளர் பிரிவில் 110 இடங்களும், இதே துறை சார்ந்த ஹெட் கான்ஸ்டபிள் பிரிவில் 746 இடங்களும் சேர்த்து மொத்தம் 872 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

வயது: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் எலக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேஷன் ஆகிய பிரிவுகளில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதப் பாடங்களுடன் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
அசிஸ்டென்ட் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேஷன் ஆகிய பிரிவுகளில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதப் பாடங்களுடன் டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். ஹெட் கான்ஸ்டபிள் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் பிளஸ் 2 அளவிலான படிப்பை இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதப் பாடங்களுடன் முடித்திருக்க வேண்டும் அல்லது ஐ.டி.ஐ., படிப்பை எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் முடித்திருக்க வேண்டும்.

உடல் தகுதி: உயரம் குறைந்த பட்சம் 170 செ.மி., இருக்க வேண்டும். இதற்கு ஏற்ற எடையும் இருக்க வேண்டும்.
மார்பளவு குறைந்தபட்சம் 80 செ.மி., குறைந்த பட்சம் 5 செ.மி., விரிவடையும் தன்மையும் பெற்றிருக்க வேண்டும். கண்ணாடி அணிந்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது. இவை தவிர இதர மருத்துவத் தகுதித் தேவைகளும் உள்ளன. முழுமையான தகவல்களை இணையதளத்தைப் பார்த்து அறியவும்.

தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மூலமாக தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கு ரூ.200/-ஐயும், இதர பதவிகளுக்கு ரூ.100ம் விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க: பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளைச் சேர்த்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Sub Inspector / Head Constable
Inspector General, Frontier HQ SSB, Ganiadeoli, Ranikhet, District : Almora (UK) Pin No. 263645
Asst. Sub Inspector
Inspector General, Frontier HQ SSB, Guwahati, House No.345, Nikita Complex, G.S. Road, Khanapara, PO/PS : Khanapara, District : Kamrup, Guwahati (Assam), Pin. No : 781022.

கடைசி நாள்: 2017 ஜன. 29
விபரங்களுக்கு: www.ssb.nic.in

Leave a Reply

தற்போதய செய்திகள்

மின்னஞ்சல் செய்திகள்

எமது புதிய செய்திகள், பதிவுகள் பற்றிய தகவலை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ள இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியை TYPE செய்யுங்கள்.

சினிமா

ஒருதலைக் காதல் பற்றி இவங்க என்ன சொல்றாங்க என்று கொஞ்சம் பாருங்கள்!- (வீடியோ இணைப்பு)

விஜய்யுடன் இணையும் சிம்பு – ரசிகர்கள் டபுள் கொண்டாட்டம்!

ரஞ்சித் இது என் கடைசிப் படம் காப்பாத்துங்க- ரஜினி : மக்களின் அன்பை இழந்த பரிதாபம்

ராதிகா அப்தேவின் அந்த படம்..! உள்ளேபோய் பார்க்காதீங்க..!

என்னை அவிழ்த்துப்போட்டு நடிக்க சொன்னார்! பிரபல நடிகையின் கார சார வாக்குமூலம்

மருத்துவம்

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமடையும் பெண்கள்

வழுக்கைத் தலையில் முடி வளர வேண்டுமா? அப்ப இத தினமும் தலையில தடவுங்க…

இதை ஒரு ஸ்பூன் கலந்து குடித்தால், தொப்பைக்கு சொல்லலாம் குட்பை!

வைரலாகும் வதந்திகளை தடுக்க பேஸ்புக் தரும் அதிரடி வசதி…!

இந்த அறிகுறிகள் தென்பட்டால் தயவு செய்து தாமதிக்காதீர்கள்!