Friday, February 22, 2019
Home > Slider > டோனியின் திடீர் முடிவுக்கு இதுதான் காரணம்!

டோனியின் திடீர் முடிவுக்கு இதுதான் காரணம்!

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான தலைவரான டோனி, நேற்று திடீரென ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சமீப காலமாக டோனியின் ஆட்டத்திறன் சிறப்பாக இல்லை என்று விமர்சனங்கள் எழுந்ததும், தலைவராக விராட் கோஹ்லி சிறப்பாக செயல்படுவதன் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடி தான் டோனியை இந்த முடிவுக்கு தள்ளியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் டோனியின் இந்த முடிவு திடீரென எடுக்கப்பட்டது கிடையாது என்று அவரது நெருங்கிய நண்பர் அருண் பாண்டே விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், இது போன்ற முடிவுகளை ஒருநாள் இரவில் எடுக்க முடியாது. இது நன்கு சிந்தித்து எடுக்கப்பட்ட முடிவாக தான் இருக்கும்.

தலைவர் பொறுப்பில் இருந்து விலகி ஒரு வீரராக செயல்பட இதுதான் சரியான தருண ம் என்று கருதியே, நன்கு ஆலோசித்து இந்த முடிவை எடுத்துள்ளார் டோனி.

ஒரு விடயத்தையே பற்றியிருக்கும் நபர் அல்ல டோனி. அவரைப் பொறுத்தவரை அணியின் நலன் தான் முக்கியம்.

எதிர்வரும் உலகக்கிண்ணத் தொடருக்குரிய அணியை உருவாக்கியுள்ளதாக டோனி நினைத்திருக்க கூடும். அதனாலே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

தற்போதய செய்திகள்

மின்னஞ்சல் செய்திகள்

எமது புதிய செய்திகள், பதிவுகள் பற்றிய தகவலை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ள இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியை TYPE செய்யுங்கள்.

சினிமா

ஒருதலைக் காதல் பற்றி இவங்க என்ன சொல்றாங்க என்று கொஞ்சம் பாருங்கள்!- (வீடியோ இணைப்பு)

விஜய்யுடன் இணையும் சிம்பு – ரசிகர்கள் டபுள் கொண்டாட்டம்!

ரஞ்சித் இது என் கடைசிப் படம் காப்பாத்துங்க- ரஜினி : மக்களின் அன்பை இழந்த பரிதாபம்

ராதிகா அப்தேவின் அந்த படம்..! உள்ளேபோய் பார்க்காதீங்க..!

என்னை அவிழ்த்துப்போட்டு நடிக்க சொன்னார்! பிரபல நடிகையின் கார சார வாக்குமூலம்

மருத்துவம்

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமடையும் பெண்கள்

வழுக்கைத் தலையில் முடி வளர வேண்டுமா? அப்ப இத தினமும் தலையில தடவுங்க…

இதை ஒரு ஸ்பூன் கலந்து குடித்தால், தொப்பைக்கு சொல்லலாம் குட்பை!

வைரலாகும் வதந்திகளை தடுக்க பேஸ்புக் தரும் அதிரடி வசதி…!

இந்த அறிகுறிகள் தென்பட்டால் தயவு செய்து தாமதிக்காதீர்கள்!