Friday, February 22, 2019
Home > Slider > ஜெயலலிதா நினைவிடம் நோக்கி முதல்வர் தலைமையில் அமைதி ஊர்வலம்!

ஜெயலலிதா நினைவிடம் நோக்கி முதல்வர் தலைமையில் அமைதி ஊர்வலம்!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு தினத்தைமுன்னிட்டு இன்று (புதன்கிழமை) அவரது நினைவிடம் நோக்கி  முதல்வர் தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.

மறைந்த முன்னள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. இதனைமுன்னிட்டு அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

நினைவிடத்தில் கட்சி தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளும் முன்னேடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா இன்று காலையில் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினார்.

இந்நிலையில் இன்று காலை வாலாஜா வீதியில் இருந்து ஜெயலலிதா நினைவிடம் நோக்கி அ.தி.மு.க சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.  இதில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமையில், கட்சியின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள், எம.எல.ஏக்கள் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

ஊர்வலம் மெரினா கடற்கரையில் நிறைவடைந்து, பின்னர் ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட அனைவரும் அஞ்சலி செலுத்தவுள்ளனர்.

ஏராளமான மக்களும் திரண்டுள்ளதால் மெரினா வீதியில் மற்றும் ஜெயலலிதா நினைவிடத்தில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Leave a Reply

தற்போதய செய்திகள்

மின்னஞ்சல் செய்திகள்

எமது புதிய செய்திகள், பதிவுகள் பற்றிய தகவலை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ள இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியை TYPE செய்யுங்கள்.

சினிமா

ஒருதலைக் காதல் பற்றி இவங்க என்ன சொல்றாங்க என்று கொஞ்சம் பாருங்கள்!- (வீடியோ இணைப்பு)

விஜய்யுடன் இணையும் சிம்பு – ரசிகர்கள் டபுள் கொண்டாட்டம்!

ரஞ்சித் இது என் கடைசிப் படம் காப்பாத்துங்க- ரஜினி : மக்களின் அன்பை இழந்த பரிதாபம்

ராதிகா அப்தேவின் அந்த படம்..! உள்ளேபோய் பார்க்காதீங்க..!

என்னை அவிழ்த்துப்போட்டு நடிக்க சொன்னார்! பிரபல நடிகையின் கார சார வாக்குமூலம்

மருத்துவம்

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமடையும் பெண்கள்

வழுக்கைத் தலையில் முடி வளர வேண்டுமா? அப்ப இத தினமும் தலையில தடவுங்க…

இதை ஒரு ஸ்பூன் கலந்து குடித்தால், தொப்பைக்கு சொல்லலாம் குட்பை!

வைரலாகும் வதந்திகளை தடுக்க பேஸ்புக் தரும் அதிரடி வசதி…!

இந்த அறிகுறிகள் தென்பட்டால் தயவு செய்து தாமதிக்காதீர்கள்!